தமிழக செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் இன்று பரோலில் விடுவிப்பு?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியான ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருந்து இன்று பரோலில் வெளியே செல்ல இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினத்தந்தி

மதுரை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ சிகிச்சை தொடர்பாக 30 நாள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடாரப்பட்டது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரவிச்சந்திரனின் தாயார் தரப்பில் பரோல் குறித்து மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று (செவ்வாய் கிழமை) அல்லது நாளை (புதன்கிழமை) சிறையில் இருந்து பரோலில் வெளியே செல்ல இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து