தமிழக செய்திகள்

ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தி, உறுதிமொழியும் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, வெளிமாநிலங்களில் வசித்து வரும் தமிழக தொழிலாளர்களை மீட்டு வர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தும் அதை அரசு பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்