ராஜீவ் ரஞ்சன் - சண்முகம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம், அரசு ஆலோசகராக சண்முகம் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தலைமைச் செயலர் க.சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். அவரது பதவி ஜூலை 2020-ன் முடிவடைய இருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக அவரது பதவி இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அவர் ஓய்வுப்பெறுகிறார். இதையடுத்து, தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜீவ் ரஞ்சன் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி மற்றும் அறிசார் சொத்துரிமை பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை மிக்கவர்.

அரசு ஆலோசகராக சண்முகம் நியமனம்

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து இன்று ஒய்வு பெறும் சண்முகம் தமிழக அரசு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக முன்ன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்