பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. வேலூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணா சாலை, திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ், பள்ளி சாலை வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், பரமத்தி, பொத்தனூர், ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.