தமிழக செய்திகள்

பள்ளிபாளையத்தில்அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் இ.ஆர்.தியேட்டர், பெரியார் நகர், காந்திபுரம், அக்னி மாரியம்மன் கோவில், பாரதியார் தெரு போன்ற பகுதிகள் வழியாக சென்று முடிவில் பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இந்த ஊர்வலத்தில் பள்ளியின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே அரசு பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு