தமிழக செய்திகள்

சங்கராபுரம் வெங்கடேச பெருமாள் கோவிலில் ராமநவமி விழா

சங்கராபுரம் வெங்கடேச பெருமாள் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் ராமநவமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சீதை, ராமர் மற்றும் லட்சுமணருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் காட்டுவன்னஞ்சூர் ஸ்ரீ ராமபாத ஆஞ்சநேயர், தியாகராஜபுரம் குளத்தூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...