வில்லியனூர்,
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). கட்டிட தொழிலாளி. இவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.