தமிழக செய்திகள்

தமிழக அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம்

தமிழக அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி வனத்துறைக்கும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும், மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறைக்கும், தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு பரிந்துரை விடுத்தார். அந்த பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவை நாளை மாலை 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து விடுக்கப்பட்ட கா.ராமச்சந்திரன் தமிழக அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்