தமிழக செய்திகள்

ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு

பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். இந்தநிலையில், ரமலான் நோன்பு மார்ச் 12-ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நேன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சுஹுர் எனப்படும் விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நேன்பு இருப்பார்கள். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு