சென்னை,
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ரமலான் மாத பிறை நேற்று தென்பட்டதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கண்ட அறிவிப்பை தமிழக அரசு தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் வெளியிட்டுள்ளார்.