சென்னை,
பிரபல இசை கச்சேரி குழுவான லஷ்மன் சுருதி உரிமையாளர்களில் ஒருவரான ராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கெண்டார். நீண்ட நாட்களாக உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு சென்னை திருவையாறு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பிய அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவை தட்டியும் ராமன் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். கதவை உடைத்து உள்ளே பார்த்த போது ராமன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.