தமிழக செய்திகள்

ராமநாதபுரம்: ரூ.6 கோடி மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை...!

ராமநாதபுரத்தில் பிடிபட்ட வைரக்கற்களின் மதிப்பு ரூ.6 கோடி என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த 2-ம் தேதி இரவு போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே வாகன சோதனையின் ஈடுபட்டனர்.

அப்போது கீழக்கரையைச் சேந்த யூசுப்சுலைமான் (வயது 39) என்பவா வந்த காரில் பாலித்தீன் பையில் மறைத்து வைத்திருந்த 160.09 கிராம் (800 காரட்) வைரக் கற்களை கைப்பற்றினா. இந்த வைரக்கற்களை ராமநாதபுரம் நகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தினா.

விசாரணையில் யூசுப்சுலைமான் கீழக்கரையைச் சேர்ந்த சுல்தானிடம் வைரக்கற்களை வாங்கியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மொபைலில் தொடாபு கொண்டபோது, அதே பகுதியைச் சேந்த அக்தா என்பவரிடமிருந்து வைரக் கற்களை வாங்கியதாகத் தெரிவித்துள்ளா. அக்தா ஹாங்காங் நாட்டிலிருந்து வைரக் கற்களை வரவழைத்து உள்ளார்.

இந்த நிலையில் பறிமுதல் செய்த வைரக்கற்களை சோதனையிட திருச்சியில் உள்ள வைர பரிசோதனை நிறுவனத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனா. பரிசோதனையில் ஹாங்காங் நாட்டு மலைப்பாறைகளில் இருக்கும் வைர வகையைச் சேந்தவை என்பதும், சாவதேச மதிப்பில் இந்த வைரக்கற்கள் ஒரு காரட் ரூ.75 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரத்தில் பிடிபட்ட வைரக்கற்கள் 160.09 கிராம் (800 காரட்) என்பதால், அதன் மதிப்பு சுமா ரூ.6 கோடி இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்