தமிழக செய்திகள்

ராமேசுவரம்: ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா

ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் மாசி திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்பாள்சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அப்போது கொடிமண்டபம் எதிரே வைக்கப்பட்டிருந்த பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி வரை 17 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகின்றது.

திருவிழாவில் வருகின்ற 31-ஆம் தேதி அன்று அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று சாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் 3-ம் தேதி அன்று சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு