தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றிய மீனவர்கள்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கருப்புக்கொடி ஏற்றினர்.

தினத்தந்தி

ராமேசுவரம்,

ராமேசுவரம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து கடந்த 11-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போராட்டத்தின் 10-வது நாளாக நேற்று ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதாவது, பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, கைது செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டிப்பதாகவும் கூறி நேற்று இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

இதுபற்றி விசைப்படகு மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறுகையில் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட வருகிற 23-ந் தேதி (நாளை மறுநாள்) ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கச்சத் தீவை நோக்கி பயணம் செய்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை