தமிழக செய்திகள்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி நாமக்கல்லை சேர்ந்தவர் சாவு

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி நாமக்கல்லை சேர்ந்தவர் இறந்தார்.

ராமேசுவரம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சந்திரம்பாளையம் கிராமத்தில் இருந்து 2 பஸ்களில் 100 பேர் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நேற்று காலை புனித நீராடினா.

பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடற்கரைக்கு வந்தபோது இவர்களுடன் வந்த மணிவேல் (வயது 45) என்பவரை காணவில்லை. கடற்கரை முழுவதும் தேடிபார்த்தனர். அப்போது தமிழ்நாடு ஓட்டல் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் இறந்து கிடந்த மணிவேலின் உடலை பார்த்து உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா தலைமையிலான போலீசார், உடலை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மணிவேல் பெயிண்ட் வேலை பார்த்து வந்ததும், திருமணமாகாதவர் என்பதும், அக்னி தீர்த்த கடலில் நீராடியபோது கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் விசாரணை தெரியவந்துள்ளது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு