தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண்

மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலி வால் வெளியிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங்(பி.இ.) சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அதற்காக பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 88 ஆயிரத்து 778 பேர் மாணவர்கள். 52 ஆயிரத்து 299 பேர் மாணவிகள்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, அண்ணாபல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண்ணை வெளியிட்டார். உடனே அனைத்து மாணவர்- மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் www.an-n-au-n-iv.edu என்ற அண்ணாபல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று அவர்களுக்கான இ-மெயில் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை பதிவு செய்தால் அவர்களுக்கு ரேண்டம் தெரியவரும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து