தமிழக செய்திகள்

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. #AnnaUniversity

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் 10 இலக்க ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின், இன்ஜியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க இம்மாதம் 2ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. இதில் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9:00 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் அன்பழகன், முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், துணைவேந்தர் சூரப்பா முன்னிலையில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

ஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 'ரேண்டம் எண்' என்பது கணினி மூலமாக தேர்வு செய்யப்படும் சம வாய்ப்பு எண் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பத்திருக்கும் மாணவர்களின் மதிப்பெண், வயது உள்ளிட்டவையை கொண்டு ரேண்டமாக கணினி தேர்வு செய்யும் எண்னையே 'ரேண்டம்' எண் ஆகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து