தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியீடு

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ரேண்டம் எண் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. மாணவர்கள் சிலர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கேட்டனர். இதையடுத்து தரவரிசை பட்டியல் 25-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு