தமிழக செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு ஏட்டுகள் இடமாற்றம்

குமா மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிவு ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

குமா மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிவு ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதா சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் சுசீந்திரத்துக்கும், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டாருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதேபோல கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ராமா, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், திருநெல்வேலி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கும், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தனிப்பிரிவு ஏட்டுகள்

மேலும் குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோட்டார் தனிப்பிவு போலீஸ் ஏட்டு மாதவன் ஆரல்வாய்மொழிக்கும், ஆரல்வாய்மொழி தனிப்பிரிவு ஏட்டு பாபு நேசமணிநகருக்கும், கன்னியாகுமரி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், தென்தாமரைகுளம் தனிப்பிரிவு ஏட்டு சுபாஷ் கன்னியாகுமரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதோடு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மகேஷ் தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்