தமிழக செய்திகள்

ராப்பத்து உற்சவம் தொடங்கியது

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் தொடங்கியது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் பழமை வாய்ந்த தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. தொடாந்து 23-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 10 நாட்களுக்கு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல வண்ண மலர்களை கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மூலவர் மற்றும் உற்சவர் சாமிகளுக்கு பலவண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.