தமிழக செய்திகள்

பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்குகள் - பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பேங்காக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பேங்காக்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ஒரு பெண் உள்பட 3 பேரின் உடைமைகளை சோதனையிட்டதில், அரிய வகை மஞ்சள் மற்றும் பச்சை நிற அனகோண்டா உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகளையும், 4 குரங்குகள், சிவப்பு கால் ஆமை உள்ளிட்ட 18 அரிய வகை விலங்குகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு