தமிழக செய்திகள்

வேளாங்கண்ணி: மர்மநபர்களால் ஆற்றில் கொட்டப்பட்ட 1000 கிலோ ரேசன் அரிசி - போலீஸ் விசாரணை

வேளாங்கண்ணி அருகே ஆற்றில் ரேசன் அரிசி கொட்டப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி:

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த சின்னத்தும்பூர் ஊராட்சியில் உள்ள மறவானற்றில் குவியலாக ரேசன் அரிசி கொட்டி கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

சுமார் 1000 கிலோ அளவிலான ரேசன் அரிசி கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவை எந்த ரேசன் கடையில் இருந்து மர்ம நபர்களால் எடுத்து வரப்பட்டு ஆற்றில் கொட்டப்பட்டது, என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...