கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடு, மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் - கூட்டுறவுத்துறை உத்தரவு

தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சண்டையிடக்கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்