தமிழக செய்திகள்

ரேசன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

அகவிலைப்படியை பொருத்த அளவில் அது பொதுவான விஷயம்தான். விலைவாசிக்கு உயர்வது போல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல ரேசன் கடை ஊழியர்களுக்கு உயர்த்த வேண்டும். கண்டிப்பாக உயர்த்தலாம்.

நகைக்கடன் தள்ளுபடியில் இதுவரைக்கும் வந்துள்ள புகார்களின் அடிப்படையில் முழுமையாக நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.

ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு