சென்னை,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பழனிக்குமார் ஐஏஎஸ் பணி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே வருகிற 28ஆம் தேதி உடன் பழனிகுமார் ஐஏஎஸ்-இன் பதவி காலம் முடிவடைகிறது.
இந்நிலையில் பழனிக்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மறுநியமனம் பழனிக்குமார் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மறு நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கையை அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
அதில் , "இந்திய அரசியலமைப்பின் 243 கே என்னும் உறுப்பின் படியும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239ஆம் பிரிவின் உட்பிரிவு (2) இன் கூறு (பி) இன் படியும் திரு வெ பழனிக்குமார் ஐ ஏ எஸ் (ஓய்வு) அவர்கள் தொடர்ச்சியாக 09.03.2021 வரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாண்புமிகு ஆளுநர் அவர்களால் மறுபடியும் பணி நியமனம் செய்யப்படுகிறார்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.