தமிழக செய்திகள்

முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மத்திய மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்..!

சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,

முதுகலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள 128 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் , முதுகலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்க இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன்   அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

SCROLL FOR NEXT