புதுச்சேரி,
புதுச்சேரியில் இன்று தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிப்படைத்தன்மையற்ற, சட்ட விதிகளை மீறிய சில தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் புதுச்சேரி அரிக்கமேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.