தமிழக செய்திகள்

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் சார்பில் 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளது என கருத்து தெரிவித்து, 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்