தமிழக செய்திகள்

சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; முரளிதரராவ் சவால்

சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால் விடுத்து உள்ளார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

சந்தன கடத்தல் மன்னன் என அழைக்கப்படும் வீரப்பன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமியின் மூத்த மகள் வித்யா ராணி. வழக்கறிஞராக உள்ள இவர் கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இதன்பின் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்து பேசினார். பா.ஜ.க. இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம். தமிழகத்தில் பொய் கூறி ஸ்டாலினால் இனி எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்