மதுரை
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையை அடுத்த பாலமேட்டில் இன்று அவரது ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் . திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறினார்.