தமிழக செய்திகள்

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு

வந்தவாசி அருகே தந்தை, மகள் பலியான விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வந்தவாசி

வந்தவாசி அருகே தந்தை, மகள் பலியான விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் தந்தை-மகள் பலி

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 43). இவர் தனது மனைவி மீரா (36), மகள் காருண்யா (11) ஆகியோருடன் கடந்த ஜூலை 30-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் வந்தவாசிக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் பொன்னூர் மலை அருகில் வந்தபோது எதிரே வந்த மினிவேன் இவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகதீசன், காருண்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயமடைந்த மீரா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மீரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஜெகதீசனின் தந்தை கிருஷ்ணன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...