தமிழக செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

புதுக்கடை அருகே கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

புதுக்கடை:

புதுக்கடை அருகே கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை மகாதேவர் கோவில் உள்ளது. இந்தகோவில் குமரி மாவட்ட தேவசம்போர்டு மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனியார் ஆக்கிரமித்து உள்ளதாக புகார்கள் எழுந்தன. அந்த வகையில் கோவிலின் காம்பவுண்டு சுவர் அருகே 41 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு கோவிலுக்கு சாதகமாக வந்துள்ளது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க குமரி மாவட்ட கோவில் நிலங்களின் மீட்பு தாசில்தார் சஜித் தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என பதாகையை வைத்தனர். இந்த மீட்பு பணியின் போது அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதிஷ்குமார், துளசி மற்றும் குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு