தமிழக செய்திகள்

மருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு

Recruitmentமருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு இன்று நடக்கிறது.

தினத்தந்தி

108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மருத்துவ உதவியாளர், டிரைவர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதில், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் 19 முதல் 30 வயதுடையவராகவும், பி.எஸ்.சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. அல்லது உயிரி அறிவியல் (பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பையோ வேதியியல், மைக்ரோ- பையாலஜி, பையோ டெக்னாலஜி ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்துக்கு 25 முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9150098283, 9154251363 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்