சென்னை,
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில வங்கியாளர்கள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 30-ம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்படுகிறது என மாநில வங்கியாளர்கள் குழுமம் கூறியுள்ளது.