தமிழக செய்திகள்

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். இதில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டார்.

உடனடி நடவடிக்கை

குறிப்பாக ஆதரவற்ற விதவை சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் பரிசிலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதில் பத்மநாபபுரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாஜ் நிஷா உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்