தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதாபிரமுகர் கைது

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி புது கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரவி. பா.ஜனதா பிரமுகர். இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஜான்ரவியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று மதியம் மதுரை மாநகர போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் புதுகிராமத்தில் வீட்டில் இருந்த ஜான்ரவியை கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை