தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் நடத்தினார்.

தினத்தந்தி

சென்னை

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாள ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணைய ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தமிழ்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களும் பிரதமர் உடனான ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை சேந்த டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பல மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை