தமிழக செய்திகள்

நிவர் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் ஏற்பட்ட சேதம் குறித்த புகைப்பட தொகுப்பு

ஏரிகள் உள்பட நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுவதால் அருவிகள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்திலுமே ஆர்ப்பரித்து மேல் செல்கிறது. சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மது குளத்தில் படித்துறையில் பாய்ந்து ஓடும் நீரில் விளையாடி மகிழும் சிறுவர் சிறுமிகளை படத்தில் காணலாம்

தினத்தந்தி

சென்னை

நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டு உள்ளது, நீர் தேங்கி உள்ளது அதன் புகைப்பட தொகுப்புகள்

1) சென்னை மெரீனாவில் புயலுக்கு பின் அமைதியான கடல் நீருக்கு முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்த இளம் ஜோடியை படத்தில் காணலாம்.

2) சென்னை மெரீனாவில் மணல் பரப்பில் தேங்கி உள்ள மழை நீரை, ஜே.சி.பி.இயந்திரம் மூலம் கரைகளை தோண்டி கடலுக்குள் வடியவிட்ட போது எடுத்த படம்.

3) செங்குன்றம் சோத்துபாக்கம் ரோடு அருகே உள்ள அக்பர் அவன்யூவில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரை படத்தில் காணலாம்.

4) நிவர் புயல் எதிரொலியாக கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக சலவைத் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததை தொடர்ந்து சலவைத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு அருகே சலவைத் தொழிலாளர்கள் துணிமணிகளை காய வைத்திருக்கும் காட்சி.

5) டீச்சர்ஸ் காலணியில் தேங்கியுள்ள மழை நீர்.

6) ஜமாலியாவில் சாலையில் தேங்கிய மழைநீரை ஜல்லிகற்கள் கெட்டி சீர் செய்வதை படத்தில் காணலாம்.

7) நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சென்னை பெரம்பூர் ஜமாலியா ஸ்டீபன்சன் சாலையின் ஒரு புறத்தில் சாலை சரிந்து சேதம் அடைந்திருக்கும் காட்சி.

8) நிவர் புயல் எதிரொலியாக தொடர்ந்து பெய்த மழையால் நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிறைந்து காணப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விலங்கும் புழல் ஏரியில் கடல் போல காட்சியளிக்கும் படத்தில் காணலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து