தமிழக செய்திகள்

மண்டல அளவிலான ஆக்கி: காஜாமியான் பள்ளி அரையிறுதிக்கு தகுதி

மண்டல அளவிலான ஆக்கியில் காஜாமியான் பள்ளி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தினத்தந்தி

மண்டல அளவிலான ஆக்கி:

காஜாமியான் பள்ளி அரையிறுதிக்கு தகுதிமண்டல அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஆக்கி போட்டி திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஆக்கி அகாடமி சார்பில் நடக்கும் இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, மணப்பாறை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று காலையில் நடந்த போட்டிகளில் திருச்சி காஜாமியான் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் அணியையும், மற்றொரு ஆட்டத்தில் திருச்சி ஆக்கி அகாடமியை 5-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது. இந்த வெற்றிகளின் மூலம் காஜாமியான் பள்ளி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மற்ற ஆட்டங்களில் திருச்சி ஆக்கி அகாடமி 3-0 என்ற கோல் கணக்கில் மணப்பாறை ஆக்கி அகாடமி அணியையும், அரியலூர் வித்யாமந்திர் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் மணப்பாறை டி ஆலை அணியையும் தோற்கடித்தன. மாலையில் நடந்த ஆட்டங்களில் கீரனூர் புனித ஆரோக்கிய அன்னை பள்ளி, திருச்சி ஆர்.சி. பள்ளி அணிகளும் வெற்றி பெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை