தமிழக செய்திகள்

வட்டார விளையாட்டு போட்டி:காரப்பேட்டை பள்ளி மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி வட்டார விளையாட்டு போட்டியில் காரப்பேட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி, கபடி போட்டியில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் 2-வது இடமும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் ஆகிய போட்டிகளிலும் பதக்கம் பெற்று, வட்டார அளவில் ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி துறைமுக கைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். விழாவில் மகமை பொருளாளர் மதியழகன், பள்ளி செயலாளர் ரமேஷ், தெற்கு தொடக்கப்பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் தேன்ராஜ், நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் அரவிந்த், ஸ்ரீதரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜதுரை சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்