தமிழக செய்திகள்

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை

திண்டுக்கல்லில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகை கார்கள், வேன்கள், சுற்றுலா வாகனங்கள் வைத்து பலர் தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு வாடகை வாகனங்களை இயக்குவதற்கு அரசுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை சிலர் வாடகைக்கு இயக்குவதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட 6 கார்கள், வாடகைக்கு இயக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சொந்த கார்களை வாடகைக்கு இயக்கக்கூடாது. மேலும் அடுத்தமுறை கண்டறியப்பட்டால் கார் பறிமுதல் செய்யப்படும் என்று டிரைவர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு