தமிழக செய்திகள்

ஆண்டிப்பட்டி கல்குவாரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை

ஆண்டிப்பட்டி கல்குவாரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி அருகே சேடப்பட்டி பகுதியில் மதுரை விசாலாட்சி நகரை சேர்ந்த தொழில் அதிபர் சரவணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று  சோதனை செய்தனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களை கொண்டு நேற்று இந்த குவாரி தொடர்பான நபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக குவாரி தொடர்புடைய நபர்கள், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு