தமிழக செய்திகள்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-இல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா மூன்றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளை முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை மாற்றி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி,

பத்தாம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 - 15 வரை நடைபெறுகிறது.

2-ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 - ஏப்.4 வரை நடைபெறுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 - 16 வரை நடைபெறுகிறது.

2-ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 - ஏப்.5 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்