தமிழக செய்திகள்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா சேக்கையில் அரசுப் பள்ளி மாணவாகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதன் மூலம் அரசு ஓதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலா ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டனர். தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் முதன் முறையாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்