சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்துக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் (பிரிவு 1 மற்றும் 2) அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்துக்கு ஜூன் 8-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 28-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 850 கன அடி என்ற அளவில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் (பிரிவு 1 மற்றும் 2) அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டு உள்ளேன்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.