தமிழக செய்திகள்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்