சென்னை,
கடந்த 2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது பியான் புயலில் கர்நாடக-கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மாயமாகினர்.
இதில் மீனவர்கள் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோர் பியான் புயலால் காணமால் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பியான் புயலில் காணாமல் போன, தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகேனும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.