தமிழக செய்திகள்

விபத்தில் இறந்தால் பிள்ளைகளுக்கு நிவாரணம்...! பஸ் முன் பாய்ந்து தாய் தற்கொலை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

தாய் இறந்த நிலையில், தன் பேரப் பிள்ளைகளின் நிலை கேள்விக் குறியாகி விட்டதாக பாப்பாத்தியின் தாயார் சிவபாக்கியம் கண்ணீர் வடித்தார்.

சேலம்

சேலம் முள்ளுவாடிகேட் மறைமலைஅடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி, கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

கணவரைப் பிரிந்து வாழும் இவருக்கு கல்லூரி படிக்கும் மகளும்,மகனும் உள்ள நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி பாப்பாத்தி தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், பாப்பாத்தி தானாகவே பேருந்தின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கல்லூரி படிக்கும் தன் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியாத சூழலில், மன அழுத்தத்தில் இருந்து வந்த பாப்பாத்தி, விபத்தில் இறந்தால் நிவாரண தொகை கிடைக்கும் என யாரோ கூறியதைக் கேட்டு தன் பிள்ளைகளுக்காக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாய் இறந்த நிலையில், தன் பேரப் பிள்ளைகளின் நிலை கேள்விக் குறியாகி விட்டதாக பாப்பாத்தியின் தாயார் சிவபாக்கியம் கண்ணீர் வடித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...