தமிழக செய்திகள்

சிலிண்டர் வெடித்து பலியான 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

சிலிண்டர் வெடித்து பலியான 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து பலியான 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்