தமிழக செய்திகள்

கேரள வெள்ளம்; ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.

சென்னை,

கேரளாவில், வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 324 பேர் உயிரிழந்தாகவும், 1500க்கும் அதிகமான முகாம்களில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.

இந்நிலையில், கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் நிவாரண பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும்பொழுது, கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும். தனியார் பள்ளியுடன் இணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை